EPFO higher pension: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியாக மே 3 நிர்ணயம் செய்துள்ளது.
மேலும் ஊழியர் மற்றும் முதலாளியின் ஊதிய விவரங்களை சரிபார்க்கும் புதிய தகவலையும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பகிர்ந்துள்ளது. ஏப்ரல் 23-ம் தேதியன்று இபிஎஃப்ஓ வெளியிட்டிருந்த உத்தரவில்,
அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்கள் கள அலுவலகத்தால் சரிபார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பதற்கு எந்த காரணமும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிக ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான செயல்முறை தன்னிச்சையானது இல்லை என்றும்,
தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உறுப்பினர் தான் பொறுப்பு என்றும் அறிவித்து இருக்கிறது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்