மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்? (அனைவருக்கும் பகிருங்கள் )

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்?

வேகமாகத் தொற்றுவது, தடுப்பூசி அதிக திறனோடு செயல்படாதது, ஆன்டிபாடி காக்டெயில் மருந்து வேலை செய்யாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவினால் இதன் மூலம் மூன்றாம் அலை பரவும் என்று கணிக்கின்றனர்.

- Advertisement -

இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் சற்று தணியத் தொடங்கினாலும் மூன்றாம் அலை விரைவில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா ப்ளஸ் என்ற புதிய உருமாறிய வைரஸ் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

- Advertisement -

உலக அளவில் சீனா, போலந்து, ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா, பிரிட்டன், போர்ச்சுகல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டெல்டா ப்ளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை சுமார் 40 பேருக்கு இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது. கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு உள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 4 வயதுச் சிறுவன் உட்பட மூன்று பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒரு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இந்தியாவை இரண்டாம் அலையின்போது உலுக்கியெடுத்த டெல்டா வைரஸ்தான் சற்று உருமாறி டெல்டா ப்ளஸ் வைரஸாக உருவெடுத்துள்ளது. இந்த உருமாறிய வைரஸை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், தற்போது செயல்பாட்டிலிருக்கும் கோவிட் தடுப்பூசிகள் இந்த உருமாறிய வைரஸுக்கு எதிராக திறம்படச் செயல்படாது என்றும் இருப்பினும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படாது என்றும் உலக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகியது.

india 3rd wave covid 19 -
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்? (அனைவருக்கும் பகிருங்கள் )

இந்த வைரஸின் உருமாற்றம் குறித்து அதன் தாக்கம் குறித்தும் பேசுகிறார் தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்.

“டெல்டா ப்ளஸ் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை யூகத்தின் அடிப்படையில்தான் தெரிவிக்கின்றனர். காரணம், இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகள் எதுவும் இல்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையும் ஆய்வுசெய்த தரவுகள் இல்லை. டெல்டா ப்ளஸ் வைரஸின் முள்போன்ற ஸ்பைக் புரோட்டீன் பகுதியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அது உடலில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறியும் `Sequenzing’ பரிசோதனைதான் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கெனவே இந்தியாவில் பரவி வந்த டெல்டா வைரஸோடு சேர்ந்து, உருமாற்றம் அடைந்து டெல்டா ப்ளஸ் வைரஸாக உருமாறியுள்ளது என்று கண்டறிந்தனர்.

இது பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டாலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இல்லை. டெல்டா வைரஸ் போன்று ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக இதுவரை அது உருவெடுக்கவில்லை.

இந்த வைரஸானது நுரையீரலில் வேகமாகத் தொற்றிவிடுகிறது. இந்த வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி பாதுகாப்பாக இருக்குமா என்பதையும் அறுதியிட்டுக் கூற முடியாது என்கின்றனர். டெல்டா ப்ளஸ் வைரஸ் அதன் அறிகுறிகளை வேகமாக உருவாக்கும் என்பதால் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் படலாம். மேலும், தற்போது பிரபலமாகியுள்ள இரண்டு மருந்துகளின் கலவையான ‘ஆன்டிபாடி காக்டெயில்’ மருந்தும் இந்த வைரஸுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்யாது என்று கண்டறிந்துள்ளனர்.

வேகமாகத் தொற்றுவது, தடுப்பூசி அதிக திறனோடு செயல்படாதது, ஆன்டிபாடி காக்டெயில் மருந்து வேலை செய்யாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவினால் இதன் மூலம் மூன்றாம் அலை பரவும் என்று கணிக்கின்றனர்.

ஒரு வைரஸ் உடலில் புகுந்தால் அது தகுந்த உறுப்பைத் தேர்ந்தெடுத்து அதில் தொற்றும். வைரஸை உறுப்புகள் ஏற்றுக்கொள்வதற்கான receptor குழந்தைகள் உடலில் உருவாகவே இல்லை அல்லது குறைவாக உள்ளது என்பதால் இது குழந்தைகளை அதிகம் பாதிக்காது. ஆனால், பெரியவர்களில் ஏற்கெனவே பாதித்தவர்களை மீண்டும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் அலையிலும் பாதிக்கப்பட்டனர். ஆன்டிபாடி குறுகிய காலமே இருக்கும் என்பதைத்தான் அது காட்டுகிறது. எனவே, மூன்றாம் அலையிலும் ஏற்கெனவே தொற்று வந்தவர்கள் பாதிக்கப்படக்கூடும்.

இரண்டாம் அலையைப் போன்று குடும்பம் குடும்பமாகப் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம். மீண்டும் பாதிக்கும் என்றாலும் ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டு உடலில் ஆன்டிபாடி உருவானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி ஆன்டிபாடி உருவானவர்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. மிதமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால், தடுப்பூசி போடாதவர்களுக்கு இது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது.

தளர்வுகள் நல்லதா?

எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரன்தீப் குலேரியா பேசும்போது கோவிட் தொற்றைத் தடுக்கும் வகையிலான பொதுமக்களின் நடத்தை மாறுபட்டுள்ளது. அதனால் நோய் அதிகமாகப் பரவும் என்று தெரிவித்துள்ளார். வைரஸ் உருமாறிக்கொண்டே இருப்பதால் இதுபோன்று நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும்.

லாக்டௌன் என்பது கோவிட் தொற்றுக்கான நிரந்தரத் தீர்வு கிடையாது. மருத்துவமனைகளில் அதிகமானோர் அனுமதிக்கப் படுவதைத் தடுக்கும் ஒரு யுக்திதான். கோவிட் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பான விஷயங்களை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு விஷயங்களைத் தீவிரமாகப் பின்பற்றினால் மூன்றாம் அலையின் தீவிரத்தை நம்மால் நிச்சயம் குறைக்க முடியும்” என்றார்.

இந்த பதிவை அனைவருக்கும் பகிருங்கள்

 

நண்பர்களுடன் பகிருங்கள்:

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -

Share - நண்பர்களுடன் பகிருங்கள்...

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள...

Latest Tamil News

More like this
Related

இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்!

பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி...

மீண்டும் கடும் வீழ்ச்சியை பதிவு செய்யும் ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த...

பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான தகவல்!

பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பில்...

சிவப்பு நிற சேலையில் தேவதையாக வந்த நயன்தாரா! அணிந்திருந்த நகை பற்றி தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்று பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link