Thursday, April 24, 2025

ரொம்ப நாளா முகுது வலி இருக்கா? அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு முதுகெலும்பு புற்றுநோய் இருக்கலாம்.

- Advertisement -

முதுகு வலி என்பது தற்போது பெரும்பாலானோர் தினமும் சந்தித்து வரும் ஒரு பிரச்சனையாகும். இதற்கு நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதோ, தவறான நிலையில் உட்கார்ந்திருப்பதோ அல்லது கால்சியம் குறைபாடோ காரணமாக இருக்கலாம்.

ரொம்ப நாளா முகுது வலி இருக்கா? அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு முதுகெலும்பு புற்றுநோய் இருக்கலாம்.
ரொம்ப நாளா முகுது வலி இருக்கா? அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு முதுகெலும்பு புற்றுநோய் இருக்கலாம்.

ஆனால் ஒருவருக்கு தொடர்ந்து பல நாட்களாக அல்லது மாதங்களாக முதுகு வலி இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு முதுகெலும்பு வரிசையில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்பட்ட கட்டி ஒரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

இப்படியான கட்டிகள் வீரியமிக்கவையாகவோ அல்லது புற்றுநோய் அல்லாதவையாகவோ இருக்கலாம். ஆனால் இதை எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ மற்றும் பிற ஆய்வக பரிசோதனையின் மூலமே உறுதிப்படுத்த முடியும். முதுகுத்தண்டு கட்டிகளை, அது இருக்கும் இடத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.

- Advertisement -

அதாவது கட்டியானது முதுகுத்தண்டுக்கு வெளியே உள்ளதா, பாதுகாப்பு உறைக்குள் உள்ளதா அல்லது முதுகுத்தண்டுக்கு உள்ளே உள்ளதா எனபதன் அடிப்படையில் இது வகைப்படுத்தலாம். இப்போது முதுகுத்தண்டு அல்லது முதுகெலும்பு புற்றுநோய் இருந்தால், அது எப்படிப்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும் மற்றும் அதை எவ்வாறு கண்டறிவது என்பதைக் காண்போம்.

- Advertisement -

முதுகெலும்பு புற்றுநோயின் அறிகுறிகள்

முதுகெலும்பில் புற்றுநோய் கட்டிகள் இருந்தால், முதலில் தெரியும் ஒரு அறிகுறி என்றால், அது முதுகு வலி தான். அதுவும் இந்த முதுகு வலியானது கூர்மையாக இருப்பதோடு, முதுகுத்தண்டுவடம் பலவீனமாக இருப்பதை உணரக்கூடும். மேலும் முதுகுதண்டுவடத்தில் கட்டிகள் இருந்தால், பின்வருமாறு முதுகு வலியை சந்திக்க நேரிடும்.

* முதுகுவலி படிப்படியாக தீவிரமாகும்.
* எவ்வளவு ஓய்வு எடுத்தாலும், வலி நீடித்திருக்கும்.
* முக்கியமாக இரவு நேரத்தில் வலி தீவிரமாக இருக்கும்.
* மேலும் முதுகில் ஊசியால் குத்துவது போன்று மிகவும் கூர்மையான வலியை சந்திக்க நேரிடும்.

முதுகெலும்பு புற்றுநோய் இருப்பின், முதுகு வலியுடன் பின்வரும் அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும். அவையாவன:

* பலவீனமான தசை
* உணர்வின்மை * கால்களில் வெப்பநிலை உணர்வு குறைவது
* சிறுநீர்ப்பை மற்றும் குடல் கட்டுப்பாட்டை இழப்பது
* பாலியல் செயலிழப்பு
* நடக்க முடியாமை முதுகெலும்பு புற்றுநோய் கட்டிகளானது 97 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளுறுப்புக்களில் இருந்து தான் முதுகுகெலும்பு வரிசைக்கு பரவவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதுகெலும்பில் உள்ள கட்டிகளை எப்படி கண்டறிவது?

முதுகெலும்பில் உள்ள கட்டிகளை கண்டறிவது என்பது ஒரு சிக்கலான செயல்முறை. இதற்கு நரம்பியல் சோதனையின் மூலம், இயக்கம் மற்றும் உணர்வுகள் அனைத்தையும் சோதனை செய்ய வேண்டும். மருத்துவர் உங்களுக்கு முதுகெலும்பில் கட்டிகள் இருப்பதாக சந்தேகித்தால், அதை உறுதிப்படுத்த பின்வரும் சோதனைகளை செய்ய பரிந்துரைப்பார். அந்த சோதனைகள் பின்வருமாறு:

* இரத்த பரிசோதனைகள்
* முதுகுத் தட்டு பரிசோதனைகள்
* சிறுநீர் பரிசோதனைகள்
* MRI அல்லது எம்ஆர்ஐ
* MRS அல்லது எம்ஆர்எஸ்
* SPECT
* ஆஞ்சியோகிராபி
* மேக்கெட்என்செபலோகிராபி
* திசு பயோப்சிஸ் போன்றவை.

எனவே நண்பர்களே! உங்களுக்கு நீண்ட காலமாக கடுமையான முதுகு வலி இருந்தால், அதை பொறுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனைகளை செய்து, தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link