தனது காதல் பற்றி மனம் திறந்தார் டிடி… நெட்டிசன்களிடம் மீண்டும் சிக்கிய பரிதாபம்

0
578
dd anhor
dd anhor

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் டிடி. இவர் சமீப காலமாக படத்திலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

தனது காதல் கணவரின் விவாகரத்து விடயத்திற்கு பின்பு ரிவி நிகழ்ச்சிகளில் தலை காட்டாத டிடி தற்போது ஒரு பாடல் வீடியோவில் நடித்துள்ளார். இந்த பாடல் காதல் கலந்த ஒரு பாடலாக, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளர்.

இந்த பாடல் குறித்து டிடி மற்றும் கௌதம் வாசுதேவமேனன் ஆகிய இருவரும் பேட்டி கொடுத்துள்ளனர்.

டிடியிடம் முதல் காதல் பற்றி கேட்டதற்கு அவர் கூறிய பதிலானது, எனக்கு காதல் பிடிக்கும். ஆனால் எனக்கு காதல் வந்ததில்லை. முதல் காதலும் இதுவரை இல்லை. ஆனால் ஒரு சிலர் மீது க்ரஷ் வந்துள்ளது. ஆனால், மிகவும் ஆழமான காதல் எதுவும் என வாழ்க்கையில் இதுவரை வந்ததில்லை எனக் கூறியுள்ளார் டிடி.

காதலித்து திருமணம் செய்து கொண்ட டிடி தற்போது அதற்கு முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் ரசிர்களை டிடியை கலாய்த்து வருகின்றனர்.

நண்பர்களுடன் பகிருங்கள்: