Wednesday, June 3, 2020
Home பொது / துணுக்குகள் கொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்? அலட்சியமா இருக்காதீங்க...! - Researchers discover...

கொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்? அலட்சியமா இருக்காதீங்க…! – Researchers discover new coronavirus symptoms

கொரோனாவை உணர்த்தும் மோசமான அறிகுறியை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் – Researchers discover new coronavirus symptoms

கொரோனா தொற்றுநோயை விரட்டுவதற்கு உலகெங்கிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த தொற்றுநோய் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.

நாளுக்கு நாள் கொரோனா வழக்குகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. அதோடு ஒவ்வொரு நாளும் கொரோனா குறித்த புதிய புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன.

தற்போது மருத்துவர்களை குழப்பும் வகையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான தடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இளம் நோயாளிகளுக்கு பரவலான சரும தடிப்புக்கள்

சரும அழற்சி குறித்து ஸ்பானிஷ் மருத்துவர்கள் 375 நோயாளிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அதில் கொரோனா நோயாளிகளுக்கு சருமத்தில் தடிப்புக்கள் ஏற்படுவதை கண்டறிந்து உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

அதுவும் இந்த அறிகுறிகள் இளம் நோயாளிகளுக்கே அதிகம் காணப்படுவதாகவும், பல நாட்கள் நீடித்திருப்பதாகவும் கண்டறிந்தனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சில வைரஸ் தொற்றுக்களில் தடிப்புக்கள் பொதுவானவை. இதற்கு சின்னம்மை ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால், கொரோனாவால் ஏற்படும் தடிப்புக்கள் சற்று வேறுபட்டவை. இது மிகவும் விசித்திரமானது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த ஆய்வில் கலந்து கொண்ட நோயாளிகள் சுவாச அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்.

இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு வகையான தடிப்புக்கள் குறித்து காண்போம்.

மாகுலோபபுல்ஸ்

உங்கள் சருமத்தில் மிகவும் சிறிய, வீங்கிய மற்றும் சற்று தடித்து சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இது தான் மாகுலோபபுல்ஸ். இந்த தடிப்பு சுமார் 7 நாட்கள் நீடித்திருக்கும். பெரும்பாலும் இம்மாதிரியான சிவந்த தடிப்புக்கள் கொரோனாவின் தீவிரமான நிகழ்வுகளில் பொதுவாக கவனித்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொட்டால் எரிச்சலூட்டும் அரிப்பு

இந்த வகை தடிப்புக்கள் பிங்க் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும். இது பெரும்பாலும் அரிப்புக்களை உண்டாக்கும். இதுப்போன்ற தடிப்புக்கள் கொரோனா நோயாளிகளின் உடலில் காணப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கைகளிலும் இது காணப்படும்.

கோவிட் டோ (COVID toe)

இந்த வகை அரிப்பு குழந்தைகளின் கால் விரல்களில் பொதுவாக காணப்படுகிறது. ஆனால் கைகளிலும் இது காணப்படலாம். இது பார்ப்பதற்கு உறைப்பனி கடித்தது போன்று தெரியும். பெரும்பாலும் இது இளம் நோயாளிகளிடம் காணப்படுகிறது. மற்றொரு விசித்திரம் என்னவென்றால், இது நோய்த்தொற்றின் பிந்தைய கட்டங்களில் தோன்றி, சுமார் 12 நாட்கள் நீடித்திருக்கும்.

கொப்புளங்கள்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் கைகால்கள் மற்றும் உடற்பகுதியில் சிறு கொப்புளங்கள் தோன்றலாம். இந்த தடிப்புக்கள் அரிப்புக்களை உண்டாக்குபவை. பெரும்பாலும் நடுத்தர வயது நோயாளிகளிடம் இந்த அறிகுறியைக் காணக்கூடும். பொதுவாக இந்த தடிப்புக்கள் கொரோனாவின் மற்ற அறிகுறிகள் வெளிப்படும் முன்னே தோன்றும் மற்றும் சுமார் 10 நாட்கள் வரை நீடித்திருக்கும்.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline