Wednesday, June 3, 2020
Home செய்திகள் உலகம் கொரோனாவிற்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும்! நம்பிக்கை வெளியிட்டுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

கொரோனாவிற்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும்! நம்பிக்கை வெளியிட்டுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது.

உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இவ்வாறு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசிற்கு எதிராக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசிக்கு பெயர் ”ChAdOx1 nCoV-19” என்பதாகும். இதை விளக்கமாக chimpanzee adenovirus vaccine vector (ChAdOx1) என்று கூறலாம். ChAdOx1 வகை தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது ஆகும்.

- Advertisement -

இந்த தடுப்பூசி கொரோனாவில் இருக்கும் கூம்புகளை தாக்கி அழிக்கும். உடலில் உண்மையில் கொரோனா வைரஸ் தாக்கும் போது, இந்த தடுப்பூசி மூலம் கொரோனா வைரஸ் தாக்கி அழிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

இதற்கான மனித சோதனை ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் இதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இன்னும் சில வாரங்கள் கழித்து இதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறுகிறார்கள்.

மனிதர்கள் மீது தொடர்ந்து இந்த தடுப்பூசியை வைத்து சோதனை செய்ய இருக்கிறார்கள். இதற்கான அடுத்தகட்ட சோதனையை அடுத்த வருடம் செய்ய இருக்கிறார்கள். இந்த சோதனை நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரசிற்கு எதிராக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசியை வைத்து குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி குரங்குகளில் இந்த தடுப்பூசியை செலுத்திய பின் சில குரங்குகளுக்கு 14 நாட்களுக்குள் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது. சில குரங்குகளுக்கு 28 நாட்களுக்குள் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி தொடர்பாக பல்கலைக்கழகம் கூறுகையில்,

கொரோனாவிற்கு எதிராக இது முதல்கட்ட வெற்றி என்றும் இது பெரிய அளவில் நம்பிக்கை அளிப்பதாகவும் கூறுகின்றார்கள்.

அத்துடன் குரங்குகளிடமும் மனிதர்களிடமும் இது தொடர்பாக அடுத்தகட்ட சோதனைகளை செய்ய வேண்டும் என குறிப்பிட்ட அவர்கள், உடனே இந்த மருந்துகளில் சோதனையையை அதிகரிக்க வேண்டும் என கூறும் அவர்கள் இதனால் விரைவில் கொரோனாவிற்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் .

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline