கொரோனா எனும் கொடிய வைரசுக்கு பிரான்சின் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துளளது.
கொரோனா வைரசின் இரண்டாம் அலை உலகின் பல நாடுகளை மிரட்டி வரும் நிலையில், பிரான்சிலும் தொற்றாளர்கள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 458 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,237 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் புதிதாக 9,155 பேர் உள்பட இதுவரை 21,53,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,54,679 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் நவம்பர் 28 ஆம் தேதி வரை அந்த நாட்டில் மூன்று கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்