ஒவ்வொரு மனிதர்களின் அழகில் உதடுகள் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. அவ்வாறு காணப்படும் உதடுகளின் நிறத்தினை வைத்தே நமது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ளமுடியும் என்ற நம்பிக்கை கிழக்கு மருத்துவத்தில் உள்ளது.
உடலில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளைப் பொறுத்தும், உதடுகளின் நிறத்தில் மாற்றங்கள் தெரியும். அவ்வாறு வரும் பிரச்சினை குறித்தும் அதற்கான உணவுகளைக் குறித்தும் இங்கே காணலாம்.
அதுமட்டுமின்றி இனிமேல் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது உதடுகளை கவனியுங்கள். உதடுகளின் நிறங்கள் இயற்கையாக பிங்க் நிறத்தில் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் நிறத்தில் சிறு மாற்றங்கள் தெரிந்தால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
வெளிரிய பிங்க் நிற உதடுகள்
உங்களது உதடுகள் வெளிரிய பிங்க் நிறத்தில் காணப்பட்டால், ரத்த சோகைக்கான அறிகுறிகள் என்றும் ஹீமோகுளோபின் மற்றும் ரத்த சிவப்பணுக்கள் குறைவாக காணப்படுவதால் உதடுகள் இவ்வாறு வெளிரிய நிறத்தில் காட்சியளிக்கின்றது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
இவர்கள் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான ப்ராக்கோலி, மாட்டிறைச்சி மற்றும் பேரிச்சம் பழம் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
சிவப்பு நிற உதடுகள்
உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் இம்மாதிரியான வேறுபாட்டினை அவதானிப்பவர்களக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்பதையும் குறிக்கிறதாம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
சிவப்பு நிற உதடுகளைக் கொண்டவர்கள் பாகற்காய், செலரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் உடலின் உட்புறத்தை சமன் செய்வதற்கு தேனைப் பயன்படுத்தவும். மேலும் இவர்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்க வேண்டும் மற்றும் அதிகம் மன அழுத்தம் கொள்ளக்கூடாது என்றும் கூறப்படுகின்றது.
ஊதா-பச்சை நிற உதடுகள்
பெரும்பாலும் இம்மாதிரியான உதடுகள் குளிர்காலங்களில் தான் ஏற்படும். ஆனால் இவ்வாறு காணப்பட்டால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். குறிப்பாக இது இதய பிரச்சனைகள் அல்லது சுவாச பிரச்சனைகளைக் குறிப்பதால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கருப்பு நிற உதடுகள்
சாதாரணமாக காட்சியளிக்கும் உதட்டின் நிறத்தினை விட்டு கருப்பு நிறத்தில் காட்சியளித்தால் செரிமான மண்டலத்தில் கோளாறு என்றும் இத்தகையவர்கள் மலச்சிக்கல், அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
இவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான அடர் பச்சை நிற காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், நட்ஸ், தானியங்கள், பழங்களான வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
உதடுகளைச் சுற்றி கருப்பு நிற கோடு
உதடுகளைச் சுற்றி கருப்பு நிற கோடு காணப்பட்டால் உடல் உடல் சமநிலையில் இல்லை என்று அர்த்தம். அதாவது ஒரே நேரத்தில் மிகுந்த குளிராக மற்றும் மிகுந்த வெப்பத்தை உணரக்கூடும். என்ன புரியவில்லையா? அப்படித் தான் என்னவென்று சரியாக சொல்லத் தெரியாதது போன்ற உணர்வை உணரக்கூடும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
இவர்கள் காரமான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை தெரிவு செய்து உட்கொள்வதோடு, போதுமான ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.