#Chinmayi #Investigation
தமிழ் சினிமாவின் பிரபல பாடகி சின்மயி தொடர்ந்து பெண் கொடுமைக்கு எதிராக சமூகவலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்.அவரை சிலர் எதிர்த்தாலும் தைரியமாக அவர் தன் கருத்தை முன் வைத்து வருகிறார்.
நீதிக்காக நீண்ட நாட்களாக போராடி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி நூட்டி ராமமோகன் ராவ், அவரின் மனைவி துர்கா ஜெயலட்சுமி மற்றும் மகன் வஸ்சிஸ்டா ஆகியோர் சேர்ந்து, அவரின் மருமகள் சிந்து சர்மாவை தாக்கும், சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து சிந்து ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விசாரணையில் இந்த சம்பவம் வரதட்சணை கொடுமை என சொல்லப்படுகிறது.
அந்த பெண்ணின் உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதித்துறையில் இருப்பவரே இப்படியான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.
This lady has evidence.
Millions of women have none.
And the worst part – she wants to live with the husband so that her kids can grow up with the father
This is what society does to women.
Conditioning her to live with a violent man for the “sake of kids”https://t.co/SGjiEnvDYF https://t.co/od11BhZouJ— Chinmayi Sripaada (@Chinmayi) September 20, 2019