chennai-kovai vante bharat rate timetable தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.
கோவையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, நண்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். கோவையில் இருந்து புறப்பட்ட பின் திருப்பூருக்குக் காலை 6.35 மணிக்கும், ஈரோடு ரயில் நிலையத்திற்குக் காலை 7.12 மணிக்கும் சென்றடையும். சேலத்துக்குக் காலை 7.58 மணிக்குச் சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

மறுமார்க்கத்தில், மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். இந்த மார்க்கத்தில் சேலத்தில் 5.48 மணிக்கும், ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கும் வந்தே பாரத் ரயில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவை செல்ல AC Chair Car வகுப்பிற்கு 1,215 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. AC Executive Chair Car வகுப்பில் 2,310 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலியாக இருக்கும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.