இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
நேற்று ஜூன் 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன் படி, இன்று ஜூன் 7ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,840க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5603க்கும் ஒரு சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,824க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.