மனைவியுடன் சாஹல் போட்ட ஸ்டைலிஸ் நடனம்.. இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்.. வைரல் VIDEO!

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

ஹரியானா: கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வீரர்கள் தங்களது வீடுகளில் ஓய்வில் உள்ளனர்.

அந்தவகையில் யுவேந்திர சாஹல் தற்போது வீட்டில் இருந்துக்கொண்டு பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாகிராம் ரீல்களை செய்து வருகிறார்.

- Advertisement -

புதிய வீடியோ

- Advertisement -

யுவேந்திர சஹால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் 65 லட்சம் பேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்த சாஹல் தற்போது தனது மனைவி தனஸ்ரீ வெர்மா உடன் இணைந்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

படு வைரல்

- Advertisement -

மேகன் வான்ஜிக் இசை ஒன்றுக்கு அவரும் அவரது மனைவி தனஸ்ரீ-ம் இணைந்து உட்கார்ந்தபடியே நடன அசைவுகளை செய்துள்ளனர். வீடியோ வெளியிட்ட 2 மணி நேரத்தில் சுமார் 2,50,000 லைக்குகளை ரசிகர்கள் அள்ளி வீசியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 1000 பேருக்கும் மேல் கமெண்ட் செய்துள்ளனர். சஹாலின் குறும்பு தனத்தை விரும்பும் ரசிகர்கள் இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

ஐபிஎல் சொதப்பல்

யுவேந்திர சாஹலுக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை. முதல் 2 போட்டிகளில் விக்கெட் எதுவுமே எடுக்காத அவர், 3வது போட்டியில் இருந்துதான் விக்கெட் எடுக்க தொடங்கினார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை எடுத்துள்ளார். இவரின் மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கை சுற்றுப்பயணம்

எனினும் இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் வரும் ஜூலை மாதம் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த வாய்ப்பை சாஹல் சரியாக பயன்படுத்திக்கொண்டால் டி20 உலகக்கோப்பையில் சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

இந்தியாவை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை T20 Asia Cup

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன....

ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் #ShaneWarne

அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.அவர்...

பிரபல தமிழ் உதைப்பந்தாட்ட வீரர் திடீரென உயிரிழப்பு (PHOTOS)

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர் டக்சன் புஸ்லாஸ் Yogendran...

“Bravo” கோலா (Cola) போத்தலைத் தூக்கி போட்ட ரொனால்டோ.. !

"Bravo" கோலா (Cola) போத்தலைத் தூக்கி போட்ட ரொனால்டோ.. ! "சூப்பர்...

யூரோ கோப்பை: மைதானத்தின் பாதியில் இருந்து கோல் அடித்த பேட்ரிக் சிக் – குவியும் பாராட்டு VIDEO

யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடரில் செக் குடியரசு வீரர் பேட்ரிக்...

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய...

விளையாட்டு செய்தித் துளிகள்…

ஐ ஆம் வெயிட்டிங்....I'm waiting... கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா நேற்று சமூக...

பிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்

இளம் வீரர்களிடம் "ஸ்பார்க்" இல்லை என்ற தோனியின் கருத்து தவறாக புரிந்து...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link