இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த டோனி, இதுவரை பல்வேறு ஹேர் ஸ்டைல்களை பின்பற்றியுள்ளார். இவர் தனது ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் மட்டுமின்றி, தனது ஹேர் ஸ்டைலாலும் பல ரசிகர்களைப் பெற்றவர்.
இவர் தனது சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் போது, ஒரு வித்தியாசமான ‘மொஹாக்’ என்னும் கீரிப்புள்ள ஹேர் ஸ்டைலில் வந்திருந்தார். இதனால் அந்த ஹேர் ஸ்டைல் மக்களிடையே மிகவும் பிரபலமானது. சரி, இப்போது இதுவரை கேப்டன் டோனி வைத்திருந்த வித்தியாசமான மற்றும் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!
மொஹாக்
இது டோனியின் மறக்க முடியாத ஒரு ஹேர் ஸ்டைல். இதில் இவர் தலையின் இரு பக்கமும் ஷேவ் செய்து, நடுவில் மட்டும் நல்ல அடர்த்தியான முடியை விட்டுள்ளார்.
மிலிட்டரி கட் ஸ்பைக்ஸ்
கேப்டன் டோனி இந்த ஹேர் ஸ்டைலில் சற்று கரடுமுரடாக இருந்தாலும், க்யூட்டாக உள்ளார். இந்த ஸ்டைலில் தலையின் நடுவே ஸ்பைக் வைத்து, இரு பக்கமும் மிலிட்டரி கட் செய்திருக்கிறார்.
ஷார்ட் பாய் கட்
இது டோனியின் சிம்பிளான ஹேர் ஸ்டைல். இந்த தோற்றத்தில் இவரது ஸ்பெஷல் என்னவென்றால், நரைத்த தாடி இருப்பது தான்.
ஷார்ட் ஸ்பைக்ஸ்
டோனியின் ஹேர் ஸ்டைலிலேயே மிகவும் பிரபலமான ஒன்று தான் இது. இதில் டோனிக்கு உள்ள நரை முடி அனைத்தும் வெளியே தென்படும் வகையில் உள்ளது. இருப்பினும் இது தான் பெஸ்ட்.
மெஸ்ஸி ஹேர்
டோனி கூட மெஸ்ஸி ஹேர் ஸ்டைலை முயற்சித்துள்ளார். இதில் இவர் மிகவும் இளமையான தோற்றத்தில், செம அழகாக காணப்படுகிறார்.
நீளமான முடி
டோனி மிகவும் மக்களிடையே மிகவும் பிரபலமாவதற்கு காரணமான ஹேர் ஸ்டைல் தான் இது. அதிலும் தோள்பட்டை அளவு நீளமான முடி வைத்து, தொப்பி போட்டு வந்தால், அவரது அழகே அழகு தான்.
சைடு ஸ்வெப்ட் ஹேர்
இதுவரை நன்கு ஸ்டைலாக பார்த்துவிட்டு, இந்த மாதிரியான ஸ்டைலில் டோனியை பார்க்க ஒருமாதிரி இருக்கலாம். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கென்று சில ஹேர் ஸ்டைல் இருக்குமல்லவா! அது தான் இது.
நேரான ஸ்பைக்
டோனி ஸ்பைக்கிலேயே பலவற்றை பின்பற்றியுள்ளார். அதில் ஒன்று தான், இந்த படத்தில் காட்டப்பட்ட ஜெல் தடவிய நேரான ஸ்பைக். இருப்பினும் இதுவும் டோனிக்கு ஒரு சிறந்த லுக்கைத் தருகிறது.
மொட்டை
டோனியின் மொட்டைத் தலை கூட உலகளவில் பிரபலமான ஒரு ஹேர் ஸ்டைல் தான்.