ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் நிலைகளால் சில சுப மற்றும் ராஜயோகங்கள் அவ்வப்போது உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் செப்டம்பர் 23 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவிருக்கிறார். இதனால் கன்னியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகம் புதனின் சொந்த ராசியில் 1 வருடத்திற்கு பின் நிகழவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கப் போகிறது. இப்போது கன்னியில் உருவாகவுள்ள புதாத்திய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் விளைவாக உங்களின் நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பல வழிகளில் உதவியாக இருக்கும் புதிய நட்பு கிடைக்கும்.
தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அறிவாற்றல் அதிகரிக்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பேச்சாற்றல் மேம்படும். இதன் மூலம் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
முதலீடுகளை ஏற்கனவே செய்திருந்தால், அதிலிருந்து நல்ல பலனைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிம்மம் செல்லும் புதன்: செப்டம்பர் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.