ஷஷ, ருச்சக, மாளவ்ய ராஜயோகம் பலன்கள்: வத ஜோதிடத்தில், நீதி கடவுள், கிரகங்களின் தளபதியான சனி மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது, இந்த கிரகம் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு மாறும் போதோ அல்லது ஒரே ராசயில் அதன் இயக்கத்தை மாற்றும் போது, பூமியிலும், மனித வாழ்க்கையிலும் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் தற்போது சனிபகவான் கும்ப ராசியில் அமர்ந்துள்ளது ஷஷ ராஜயோகத்தை உருவாகியுள்ளது. மறுபுறம் செவ்வாய் கிரகத்தின் உச்ச ராசியான மகர ராசியில் நுழைந்து செவ்வாய் ருச்சக ராஜயோகம் உண்டாகிறது. அதேபோல் மார்ச் மாதம் சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீனத்தில் பெயர்ச்சி அடைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
இந்த அற்புத நிகழ்வானது தற்போது சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு நடகப்போகிறது. இந்த ராஜயோகத்தால் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும், மேலும் இந்த ராஜயோகங்கள் இந்த மூன்று ராசிக்கு பதிவி உயர்வு, கௌரவம், சம்பள உயர்வு போராவற்றை தரும். இந்நிலையில் இந்த மூன்று ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக பலனைத் தரப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மூன்று ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்:
ரிஷபம்:
மூன்று ராஜயோகங்கள் ரிஷப ராசியிருக்கு சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும். நீண்டதூர பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வெளியூரில் படிக்கும் கனவு நிறைவேறும்.
மிதுனம்:
மூன்று ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும். அதிர்ஷ்டமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றம் அடைவதோடு நிதி ஆதாயமும் பெருவேறெகள். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம். மூன்று ராஜயோகத்தால் மிதுன ராசி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். வீடு தேடி அரசு வேலை வரும். வாகனம் ஆசை நிறைவேறும். வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்.
மகரம்:
மூன்று ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சட்ட ஆலோசனையைப் பெறுவது நல்லது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வணிகர்கள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக வெளிநாடு வேலை, கல்வி உள்ளிட்ட விஷயங்களை முயற்சி செய்பவர்களுக்கு அதில் சாதக முடிவுகளைப் பெற முடியும். காதல் உறவு திருமணமாகக் கைகூடலாம்.