இன்றைய ராசிபலன்
மேஷம்
மேஷம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் லோசனையை ஏற்பார்கள்.
கடகம்
கடகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
கன்னி
கன்னி: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
துலாம்
துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
தனுசு
தனுசு: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.
weekly horoscope , weekly rasi palan , horoscope in tamil , horoscope , tamil jodhidam , weekly horoscope tamil , tamil horoscope , rasi palan today tamil , horoscope today , 3 juneweekly tamil horoscope , tamil astrology , daily horoscope t , amilmonthly horoscope , #horoscope tamil , weekly rasi palan in tamil , daily tamil horoscope , tamil horoscope today , horoscope weekly , rasipalan , tamilrasipalan , simha rasi