நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆஜீத் வெளியேறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.
இதனால் போட்டி மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஆஜீத் வெளியேறியதை அவரும் மற்றவர்களும் இயல்பாக எடுத்து கொண்டதால் யாரும் பெரிதாக வருத்தப்படவில்லை.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் விளக்குகள் அணைந்த பின் பாலாஜி, ஷிவானியிடம் பேசிய காட்சிகள் காட்டப்பட்டன. அதில் அவர் என்னை சோம்பேறின்னு எப்படி சொல்லலாம் என அவர் கண்கலங்க, பதிலுக்கு ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது நீ ஒருமையில திட்டுனது, குரல் உயர்த்தி பேசுனது தான் காரணம் என சரியான பாயிண்டை ஷிவானி எடுத்து கூறினார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஷிவானி அம்மா வந்து திட்டிட்டு போயும் கூட மறுபடியும் இப்படி பேச ஆரம்பிச்சுட்டீங்க? என கிண்டலடித்து வருகின்றனர்.
#shivani‘s point to #bala makes real sense. Surprising one from her. Still #bala prefers to stay away from realization #BiggBossTamil4 #BBTamilSeason4 #biggbosstamilseason #BiggBossTamil
— Jeyabharathy (@Jeyabharathy15) January 3, 2021