நடிகை நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் ஆதியை தான் நிக்கி கல்ராணி காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை நிக்கி கல்ராணி ரகசிய திருமணம் முடித்து விட்டதாக தகவல் வைரலாகி வந்தது.
இந்த சர்ச்சைகளுக்கு முற்று வைக்கும் விதமாக நிச்சய புகைப்படங்களை வெளியிட்டு திருமணம் குறித்த மகிழ்ச்சியன தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி சென்னையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர். விரைவில் திருமண திகதியையும் அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்