Tuesday, October 20, 2020
Home செய்திகள் அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி! கல்லூரியை திறக்கும் திட்டமா?

அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி! கல்லூரியை திறக்கும் திட்டமா?

சென்னையில் பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் போதிய இடவசதிகள் இன்றி திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் என பெரிய கட்டிடங்கள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

சமீபத்தில் அவ்வாறு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை மையம் காலி செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அண்ணா பல்கலையின் நிலை மற்றும் தேர்வு குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம். தேர்வுகள் ஒத்திவைப்பு கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து கல்வி நிறுவனங்களைத் திறக்க முடியாத சூழல் நிலவி வருவதால் மாணவர்கள் மத்தியில் இதுகுறித்தான பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

பொறியியல் தேர்வுகள் இதனிடையே, கடந்த மாதம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், பொறியியல் கல்லூரி தேர்வுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்தது. யுஜிசி அறிவுரை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வுகளை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது.

- Advertisement -

Coronarep_isolationward_thinatamil
Coronarep_isolationward_thinatamil

- Advertisement -

டிசம்பர் வரையில் தேர்வு இல்லை இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகளைத் தொடங்குவது தாமதமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தாலும் zero academic year அறிவிக்கப்படாது என உயர்கல்வி செயலர் அமித் காரே நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் சமீபத்தில் பேசிய தகவல் வைரலானது. அண்ணா பல்கலையின் முடிவு பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என அண்ணா பல்கலைக் கழகம் ஏற்கனவே அறிவித்தது.

மேலும், கொரோனோ தொற்றின் தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்று தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா முகாமான கல்லூரிகள் இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனா வார்டான அண்ணா பல்கலை அதன்படி, சென்னையில் லட்சக் கணக்கானோர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் இன்றி அண்ணா பல்கலைக் கழகமும் சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டது.

முன்னதாக, பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா பரிசோதனை செய்தவர்களைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கடிதம் எழுதியது. சிறப்பு மையமான பல்கலைக் கழக விடுதி கடந்த மாதங்களில் கொரோனாவினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

corona-ward-thintamil
corona-ward-thintamil

1300 படுக்கைகள் சென்னையில் மட்டுமே லட்சக் கணக்கான மக்கள் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அண்ணா பல்கலைக் கழகத்தில் 1,300 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதால் அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து, சிகிச்சை அளிப்பதற்கான செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு வருகின்றன.

11 ஆயிரம் பேர் மட்டுமே பாதிப்பு தற்போது, சென்னையைப் பொறுத்தவரையில் 11,130 பேர் மட்டுமே கொரோனா தொற்றினால் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையங்கள் காலியாகி வருகின்றன. அண்ணா பல்கலையில் இப்போது எத்தனை பேர்? அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் கிண்டி கொரோனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், அண்ணா பல்கலையில் சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் பணியைத் தொடங்கும் வகையில் படுக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகள் அப்படியே இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வழியில் பருவத் தேர்வு பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவர்களுக்குத் தேர்வு வைக்க வேண்டியதன் அவசியம் கருதி விரைவில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் தேர்வை எழுதுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software