Thursday, April 24, 2025

அக்ஷய திருதியை: இன்று தெரியாமல் கூட இவற்றை செய்யாதீர்கள்… கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!!

- Advertisement -
அக்ஷய திருதியை: இன்று தெரியாமல் கூட இவற்றை செய்யாதீர்கள்... கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!!
அக்ஷய திருதியை: இன்று தெரியாமல் கூட இவற்றை செய்யாதீர்கள்… கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!!

ஒவ்வொரு ஆண்டும் செல்வச்செழிப்புக்காகவும், வளம், தான தர்மத்துக்காகவும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் அக்ஷய திருதியை பண்டிகையும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் சுக்ல பக்‌ஷ திருதியை திதியில் இது கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு அக்ஷய திருதியை, இன்று, அதாவது மே 10 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. அக்ஷயம் என்றால் அள்ள அள்ள குறையாத என்று பொருள். புனித நாளான அக்ஷய திருதியை நாளில் நாம் என்ன செய்தாலும், அந்த செயலும், அந்த எண்ணமும் பெருகிக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

இந்த நாளில் நாம் தான தர்மங்கள் போன்ற நல்ல காரியங்களை செய்தால், எப்போதும் அந்த ஈகை குணம் நம்முடன் இருக்கும். அது மட்டுமின்றி ஈகை செய்வதற்கான செல்வமும் நம்மிடம் நிறைந்திருக்கும். காலப்போக்கில் இந்நாளில் தங்கம் வெள்ளி வாங்குவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றாலும், இந்த தினத்திற்கான உண்மையான தாத்பர்யத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

- Advertisement -

நமது சாஸ்திரங்களின் படி அட்சய திருதியை நாளில் கண்டிப்பாக செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை பற்றி தெரிந்துகொண்டு கடைபிடிப்பது நல்லது.

- Advertisement -

அக்ஷய திருதியை அன்று செய்ய வேண்டியவை:

தானம் செய்தல்:  அட்சய திருதியை நாளில் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது மிக நல்லது.

- Advertisement -

தங்கம், வெள்ளி வாங்குதல்: அட்சய திருதியையின் புனிதமான நாளில், தங்கம் வாங்க அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்திலும் நினைத்த நேரத்தில் தங்கம் வாங்கும் அளவிற்கு உங்கள் பொருளாதார நிலை உயரும் என்பது ஐதீகம்.

புதிய தொழில் தொடங்கலாம்: அக்ஷய திரிதியை புதிய தொழில் தொடங்குவதற்கு அதிர்ஷ்டமான நாளாக நம்பப்படுகிறது. புதிய தொழில் தொடங்குவது மட்டுமல்லாமல், ஏற்கனவே செய்யும் தொழிலுக்கான தளவாடங்கள், பொருட்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை வாங்கவும் இது நல்ல நாளாக பார்க்கப்படுகின்றது.

புதிய முதலீடுகள் செய்யலாம்: அட்சய திருதியை நாளில் புதிய திட்டங்கள், மியூசுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடுகளை செய்யலாம். இந்த நாளில் தொடங்கப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

நிலம், மனை வனக்குதல்: புதிய நிலம், மனை, வீடு வாங்குவதும் இந்த நாளில் மிகச்சிறந்ததாக கருதப்படுகின்றது. இந்த நாளில் புதிய இடங்களுக்கான பதிவு அதாவது ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதும் சுபமாக இருக்கும்.

ஆன்மீக நடவடிக்கைகள்: அட்சய திருதியையின் போது, நீங்கள் பிரார்த்தனை, தியானம் மற்றும் யாகா போன்ற ஆன்மீக செயல்களுக்கான நடவடிக்கைகளையும் தொடக்கலாம்.

அக்ஷய திருதியை அன்று செய்யக்கூடாதவை:

வீட்டில் இருள் வேண்டாம்: அட்சய திருதியை அன்று வீடு முழுவதும் ஒளிமயமாக இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். வீட்டின் எந்த மூலையையும் இருட்டாக இருக்க விடாதீர்கள்.

விநாயகரையும் லட்சுமியையும் தனித்தனியாக வணங்க வேண்டாம்: இந்த நன்நாளில் விநாயகரையும் லட்சுமி அன்னையையும் சேர்த்தே வணங்க வேண்டும் என கூறப்படுகின்றது. இது பன்மடங்கும் செல்வத்தை அளிக்கும்.
வெறுங்கையுடன் திரும்ப வேண்டாம்: அட்சய திருதியை அன்று ஷாப்பிங் செய்யும்போது, ​​உங்களுக்கு விருப்பமான எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், வெறுங்கையுடன் வீடு திரும்பாதீர்கள். ஏதாவது ஒன்றை வாங்கிய பின்னரே வீடு திரும்ப வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். தங்கம் அல்லது வெள்ளியாக இல்லாவிட்டாலும், வெண்மையான பொருட்கள், கல் உப்பு, புஷ்பம், பழங்கள் ஆகியவற்றை வாங்குவது சுபமாக கருதப்படுகின்றது.

தீய, கெட்ட வார்த்தைகளை பேச வேண்டாம்: அட்சய திருதியை நாளில் வீட்டில் நல்ல சொற்களையே பேசுங்கள். இந்த நாளில், தீய சொற்கள், சண்டைகள், கெட்ட வார்த்தைகள், வசைகள் ஆகியவற்றை வீட்டில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link