இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை சற்று ஏற்றத்துடன் இருந்தது.
நேற்று ஜூலை 5ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று ஜூலை 6ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6820க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து 54560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5587க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,696க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.