பிரான்சில் ஆசிரியர் சாமுவேல் பாட்டி கொலை தொடர்பாக நான்கு மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறையில் நபிகள் நாயகத்தின் காரட்டூன்களை காட்டியதற்காக ஆசிரியர் சாமுவேல் பாட்டி தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசிரியரை கொன்ற 18 வயதான Abdullakh Anzorov என்ற இளைஞனை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் சாமுவேல் பாட்டி கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நான்கு மாணவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதில் 3 மாணவர்கள், கொலையாளி Abdullakh Anzorov-வுக்கு ஆசிரியர் சாமுவேல் பாட்டியை அடையாளம் காட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என நீதித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
13 முதல் 14 வயதுக்குட்பட்ட மூவர் மீதும் பயங்கரவாத கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நான்காவது கைது செய்யப்பட்டவர், ஆசிரியர் சாமுவேல் பாட்டிக்கு எதிராக கடுமையான ஆன்லைன் பிரச்சாரத்தை ஆரம்பித்த ஒருவரின் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறையில் ஆசிரியர் பாட்டி பேசியதை அவதூறாக கண்டனம் செய்ததாக மாணவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்