பிக்பாஸ் 4வது சீசனின் டைட்டில் வின்னர் ஆரி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக தனக்கென ஓர் முத்திரை பதித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நன்னடத்தை மூலமாக ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதல் முறையாக சென்னை மெரினா மாலில் ரசிகர்களை சந்தித்த ஆரி, “ரசிகர்களாக மட்டுமே பார்க்கப்பட்ட உங்களை நான் ஒரு ரசிகனாக பார்க்க வந்துள்ளேன். ஏனென்றால் நீங்கள் வாக்களித்த ஒவ்வொரு வாக்கும், அன்பும் ஆதரவும் தான்…. நீங்கள் இல்லை என்றால் இன்று நான் இல்லை!” என சொன்னதுமே ரசிகர்கள் நெகிழ்ந்து, சத்தமிட்டு கத்தியபடி ஆர்ப்பரித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
இந்த வீடியோவை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆரி, “முதல் வணக்கம். 21.2.21 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. வந்திருந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ள, காலமும் சூழலும், மெரினா மாலில் ஒத்துழைக்காததிற்கு வருந்துகிறேன். புகைப்படம் எடுக்க வரிசையில் நின்ற உங்கள்பண்பிற்கும் அன்பிற்கும் இந்த ரசிகனின் ராயல் சல்யூட்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தவிர, ஒரு போலீஸ் ஸ்டோரியில் முன்னதாக ஆரி நடித்த அலேகா, பகவான் போன்ற படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆரி நடித்த, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் சயின்ஸ் ஃபிக்சன் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியது.
View this post on Instagram
ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்ல இது…
என் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ❤ #makkalukumudhalvanakkam pic.twitter.com/Yy4x8KDQ25— Aari Arjunan (@Aariarujunan) February 22, 2021