கனடா அதிகமான வெளிநாட்டினரை வரவேற்கத் தயாராகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஊழியர் பற்றாக்குறை அதற்கு முக்கியக் காரணம்.
அதனால் குடியேறிகளின் எண்ணிக்கையை உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலையிலிருந்து விரைவாக ஓய்வு பெறுகின்றனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைத் தகவல்களின்படி கனடாவில் ஏழு பேரில் ஒருவர், 55 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
நாட்டில் நிறுவனங்கள் மிகப்பெரிய ஊழியர் நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. மார்ச் மாதம் ஒரு மில்லியன் வேலைக் காலியிடங்கள் இருந்தன.
கனடாவில் குடியேறியவர்கள்…
2021 – 405,000 பேர்
2022 – 431,000 பேர்
எதிர்காலத்தில் கனடாவின் இலக்கு…
2023 – 465,000 பேர்
2024 – 485,000 பேர்
2025 – 500,000 பேர்
2021 தகவல்களின்படி கனடாவின் மக்கள்தொகை 39 மில்லியன்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்