Thursday, June 4, 2020
Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் அனுமதிக்கப்படும் 34 வகையான கடைகள் விவரம்

தமிழகத்தில் அனுமதிக்கப்படும் 34 வகையான கடைகள் விவரம்

தமிழகத்தில் திங்கள்கிழமை திறக்க அனுமதிக்கப்படும் 34 வகையான கடைகள் பற்றிய விவரத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24.03.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 02.05.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகளை அனுமதிப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் திங்கள்கிழமை முதல் திறக்கப்படும் கடைகளின் விவரம்:

1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
3) உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10) வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும்
வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12) கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13) சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)
14) சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக
பகுதிகளில் மட்டும்
15) மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
16) டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
17) பெட்டி கடைகள்
18) பர்னிச்சர் கடைகள்
19) சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20) உலர் சலவையகங்கள்
21) கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22) லாரி புக்கிங் சர்வீஸ்
23) ஜெராக்ஸ் கடைகள்
24) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
26) நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27) விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
28) டைல்ஸ் கடைகள்
29) பெயிண்ட் கடைகள்
30) எலக்ட்ரிகல் கடைகள்
31) ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
32) நர்சரி கார்டன்கள்
33) மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
34) மரம் அறுக்கும் கடைகள்.

- Advertisement -

(முடிதிருத்தும் நிலையங்கள் (சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்ககூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.) ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் / கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொருத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு / கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள்
பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினர், அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள் / நிறுவனங்களில், பணியாளர்கள் / வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றப்படுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பெண்களே!… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா? இனியும் வெட்கப்பட வேண்டாம்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்!… உண்மை வெளியானதால் ரசிகர்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற...

நடிகை குஷ்புவா இது? இளம் மகள்களையும் மிஞ்சிய அழகு! கிரங்கிப் போன...

குஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர். இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹீரோயின்களில் கோவில் கட்டப்பட்ட ஒரு நடிகை என்றால் அது...

நடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா?.. உறுதி செய்த...

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக்...

குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்..?

குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline