சர்வதேச கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்கள் பாதுகாப்புடன் மீட்பு… புகைப்படங்கள் வெளியானது (Photos) கடல் மார்க்கமாக படகுகள் மூலம் வேறு நாடுகளுக்குள் செல்ல மேற்கொள்ளும் முயற்சி மிகுந்த ஆபத்து நிறைந்ததும் பயங்கரமானதுமாகும்.
எத்தனையோ படகுகள் கடலில் மூழ்கி பலர் இற்றைவரையும் காணாமல் போயுள்ளனர் சிலர் தங்கள் உயிர்களையும் இழந்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் பயணம் செய்பவர்கள் அந்நாட்டில் வசிக்கவோ, தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவோ இடமளிக்கப்பட மாட்டார்கள். அத்தோடு இவ்வாறான சட்டவிரோதமான முயற்சியில் வேறு நாடுகளுக்குள் செல்ல முயற்சிப்பவர்கள் சட்டரீதியாக புலம்பெயர்வதற்கான ஏதேனும் வாய்ப்பையும் கூட சுயமாக இழந்து விடுவர். அந்தளவுக்கு ஒவ்வொரு நாட்டினுடைய சட்ட ஏற்பாடுகள் வலுவாக இருக்கும்.
இது தொடர்பில் மக்கள் விழிப்புடனும் முன் அவதானத்துடனும் செயற்பட வேண்டும். மோசடிக்காரர்களை நம்பி ஏமாந்து விடவோ, அதனால் பாதிக்கப்படவோ கூடாது.
புதிய இணைப்பு
சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் அதிகளவானவர்கள் வடக்குக் – கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் எனவும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அகப்பட்டு சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு நடுக்கடலில் ஓட்டையானதையடுத்து கடலில் மூழ்க ஆரம்பிக்கவே வியட்நாம் அருகே ஜப்பான் மீட்பு குழுவால் மீட்டு தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்