அனைத்து ஆண்களுக்குமே எடையை குறைத்து தொப்பை இல்லாமல் வலுவான தசைகளை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
ஆனால் அனைத்து ஆண்களும் அவ்வாறு இருப்பதில்லை, பலரும் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை, சிலர் தவறான முயற்சிகளை எடுக்கிறாரகள்.
குறிப்பாக 30 வயதுகளில் இருக்கும் ஆண்களுக்கு தொப்பை என்பது அவமானகரமான ஒன்றாகவே இருக்கிறது.
30 வயதுகளில் இருக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் தங்களின் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு காரணம் அவர்களை வேலைப்பளு, மாறிவிட்ட வாழ்க்கைமுறை என பல இருக்கலாம்.
ஆனால் விரும்பியதை அடைய சில தியாகங்களையும், முயற்சியையும் செய்துதான் ஆக வேண்டும்.
இந்த பதிவில் 30 வயதுகளில் இருக்கும் ஆண்கள் தொப்பையை குறைத்து வலுவான தசைகளை பெறுவது எப்படி என்று பார்க்கலாம். ஏழு நாட்களில் மாற்றம் உண்டு.
ஜிம்மில் சௌகரிய நிலையை விட்டு வெளியே வாருங்கள்
எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்பவர்கள் தங்களுக்கென குறிப்பிட்ட உடற்பயிற்சியை மட்டும் வைத்திருப்பார்கள்.
ஆனால் நீங்கள் நினைத்த உடலமைப்பை பெற வேண்டுமெனில் உங்களுடைய வழக்கமான உடற்பயிற்சிகளில் இருந்து கொஞ்சம் வெளியே வாருங்கள்.
வழக்கமாக நீங்கள் செய்வதை விட சற்று கடினமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யும் நேரத்தை அதிகரியுங்கள். இது உங்களின் எடையை விரைவில் குறைப்பதுடன் நீங்கள் எதிர்பார்க்காத பல பலன்களை தரும்.
கார்போஹைட்ரேட்டை சரியாக பயன்படுத்துங்கள்
கார்போஹைட்ரேட்டுகள் தந்திரமான உணவு வகையாகும். இதனை சரியாக பயன்படுத்தாமல் சோதிக்காமல் உண்டால் உங்கள் உடலின் எடையும், கொழுப்பும் அதிகரிக்கும்.
அதேசமயம் இதனை சரியாக உபயோகிக்க கற்றுக்கொண்டால் இது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் எடையையும் விரைவில் குறைக்க உதவும்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பிருக்கும் உணவில் உங்களுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.
அந்த ஆற்றல் உடற்பயிற்சிக்கு உதவும். மற்ற நேரங்களில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.
நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கவும்
எடையை குறைப்பதற்கும், தசைகளை வலுப்படுத்தவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எப்போதாவது ஆல்கஹால், சோடா போன்றவற்றை குடிப்பது உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து கொள்ள உதவும்.
அதிகம் தண்ணீர் குடிப்பது அல்லது மூலிகை டீ குடிப்பது உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து கொள்ளவும், வயிற்று கொழுப்பை கரைக்கவும் உதவும்.
காஃபைன் இருக்கும் பொருட்கள் அதிக ஆற்றலை வழங்க உதவும். ஆனால் படுக்கைக்கு செல்லும் முன் அவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
போதுமான தூக்கம்
இந்த வயதுகளில் இருக்கும் ஆண்கள் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியமாகும்.
நாள் முழுவதும் செய்யும் வேலைக்கும், உடற்பயிற்சிக்கும் உங்கள் உடலுக்கு இந்த ஓய்வு அவசியமானதாகும்.
அப்போதுதான் உங்கள் உடல் தனக்கான ஆற்றலை மீண்டும் உருவாக்கி கொள்ள இயலும்.
தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது உங்களுக்கு தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் கடுமையான சோர்விற்கும் வழிவகுக்கும்.
இந்த சூழ்நிலையில் கொழுப்பை கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடும்.
கூடுதல் பயன்பாடு
இது அனைவருக்குமான வழி அல்ல. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை இலட்சியமாக வைத்திருப்பவர்கள் தசை வளர்ச்சிக்காக கூடுதல் பொருட்களை சேர்த்து கொள்ளலாம்.
உடலை வலிமைப்படுத்தவும், கொழுப்பை குறைக்கவும் பல ஜிம்களில் இது பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதனை உபயோப்படுத்துபவர்களுக்கு வழக்கத்தை விடவும் அதிகஉடற்பயிற்சியும் உடற்பயிற்சியும், உணவும் தேவைப்படும்.
இந்த பொருட்களை உபயோகப்டுத்துவதன் மூலம் நீங்கள் விரும்பும் உடலமைப்பை விரைவாகவே பெறலாம் ஆனால் இதனை உபயோகப்படுத்த தொடங்கும் முன் உங்கள் பயிற்சியாளரை ஆலோசிப்பது நல்லது.