23 மே இன்று தங்கம் விலை ஓரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை உயர்வுக்கு நேற்று சடன் பிரேக் போடப்பட்ட நிலையில் இன்று தடாலடியாக குறைந்து பலருக்கும் அதிர்ச்சி கலந்த இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இன்று தங்கம் வாங்குவோர் 3 வார முந்தைய விலைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தங்கம் விலை
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் தங்கம் விலை அதிகப்படியான ஆதிக்கத்தைக் கொண்டு உள்ளது. பெடரல் ரிசர்வ் தும்பினால் கூட தங்கம் விலை உயரும் அபாயத்தில் தான் உள்ளது, இந்த வார துவக்கத்தில் வட்டி விகிதம் குறைக்க வாய்ப்புள்ளது எனக் கணிப்புகள் வெளியான நிலையில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து புதிய வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டது.
இந்த நிலையில் வட்டி விகிதத்தை, பணவீக்கம் குறையும் வரையில் குறைக்க முடியாதென பெடரல் ரிசர்வ் திட்டவட்டமாகக் குறியது. இதனால் செவ்வாய்க்கிழமை முதல் தங்கம் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு இன்று பெரும் சரிவுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் இந்த சரிவு அடுத்த சில நாட்களில் வெளியாகும் அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் PMI அளவுகள் அடிப்படையிலேயே உள்ளது. இதுவரையில் தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.
வியாழக்கிழமை சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2413 டாலரில் இருந்து 2369 டாலர் வரையில் சரிந்துள்ளது. நேற்றைய அமெரிக்க சந்தை வர்த்தகத்திலும், இன்று காலை ஆசியச் சந்தை வர்த்தகத்திலும் தங்கம் முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தனர்.
இதன் எதிரொலியாக இந்தியாவில் தடாலடியாக குறைந்துள்ளது. இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.59 சதவீதம் வரையில் சரிந்து 72,617 ரூபாய்க்கு ஜூன் மாத பியூச்சர்ஸ் ஆர்டர்கள் விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை 1.92 சதவீதம் சரிந்து 91,228 ரூபாய்க்கு சரிந்தது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1100 ரூபாய் குறைந்து 67,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1200 ரூபாய் குறைந்து 73,640 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 880 ரூபாய் குறைந்து 54000 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை வியக்க வைக்கும் வகையில் ஒரு கிலோவுக்கு 3300 ரூபாய் குறைந்து 97000 ரூபாயாக சரிந்துள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 390 ரூபாய் குறைந்து 27,660 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 6,750 ரூபாய், மும்பை – 6,730 ரூபாய், டெல்லி – 6,745 ரூபாய், கொல்கத்தா – 6,730 ரூபாய், பெங்களூர் – 6,730 ரூபாய், ஹைதராபாத் – 6,730 ரூபாய், கேரளா – 6,730 ரூபாய், புனே – 6,730 ரூபாய், பரோடா – 6,735 ரூபாய், அகமதாபாத் – 6,735 ரூபாய், ஜெய்ப்பூர் – 6,745 ரூபாய், லக்னோ – 6,745 ரூபாய், கோயம்புத்தூர் – 6,750 ரூபாய், மதுரை – 6,750 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 7,364 ரூபாய், மும்பை – 7,342 ரூபாய், டெல்லி – 7,357 ரூபாய், கொல்கத்தா – 7,342 ரூபாய், பெங்களூர் – 7,342 ரூபாய், ஹைதராபாத் – 7,342 ரூபாய், கேரளா – 7,342 ரூபாய், புனே – 7,342 ரூபாய், பரோடா – 7,347 ரூபாய், அகமதாபாத் – 7,347 ரூபாய், ஜெய்ப்பூர் – 7,357 ரூபாய், லக்னோ – 7,357 ரூபாய், கோயம்புத்தூர் – 7,364 ரூபாய், மதுரை – 7,364 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் – சென்னை – 54000 ரூபாய், மும்பை – 53840 ரூபாய், டெல்லி – 53960 ரூபாய், கொல்கத்தா – 53840 ரூபாய், பெங்களூர் – 53840 ரூபாய், ஹைதராபாத் – 53840 ரூபாய், கேரளா – 53840 ரூபாய், புனே – 53840 ரூபாய், பரோடா – 53880 ரூபாய், அகமதாபாத் – 53880 ரூபாய், ஜெய்ப்பூர் – 53960 ரூபாய், லக்னோ – 53960 ரூபாய், கோயம்புத்தூர் – 54000 ரூபாய், மதுரை – 54000 ரூபாய்.