பிக்பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பள்ளிக்கூடம் டாஸ்க்கின் போது வனிதா, கஸ்தூரி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல் முன்பு கஸ்தூரி வனிதாவை வத்திக்குச்சி என்று கூறியது வனிதாவிற்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்தியது.

அதனால் இந்த டாஸ்கில் பழிவாங்குவதற்கு கஸ்தூரியை விடாமல் துரத்திக்கொண்டிருந்தார். சில தருணங்களில் வனிதாவின் பேச்சினை எதிர்த்து பேசமுடியாமல் தடுமாறினார். இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சியில் கமல் அந்த விடயத்தினை எடுத்துப் பேசி அசத்தியுள்ளார்.