உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 12-வது லீக் ஆட்டம் கார்டிபில் நடைபெற்றது. இதில் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 12-வது உலகக்கோப்பை லீக் ஆட்டம் கார்டிபில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன் குவித்தது. அதிக பட்சமாக ஜேசன் ராய் 153 ரன்னும், பேர்ஸ்டோவ் (51) ஜோஸ் பட்லர் (64) ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 387 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்காளதேச அணி சார்பில் அதிக பட்சமாக சாகிப் அல் ஹசன் 121 ரன்னும், ரஹீம் 44 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.