எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் உள்ள அல்ரீஷ் நகரில் நேற்று ரம்ஜானை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். போலீசார் சோதனைச்சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள், சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் அங்கிருந்த 2 அதிகாரிகள் உட்பட 10 போலீசார் உடல் சிதறி பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.