பிக்பாஸ் சீசன் 3 தமிழில் தொடங்கப்போகும் நாள் மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. வரும் ஜூன் 23 என ஒளிபரப்பு தேதியை அறிவித்து விட்டார்கள். மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசனை இதில் தொகுப்பாளராக காண ரசிக பெருமக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தொடர் புரமோக்களும் வந்துவிட்டன.

ஆனால் தெலுங்கு ரசிகர்கள் கவலையோடு இருக்கிறார்கள். சீசன் 3 நிகழ்ச்சி முறையான அறிவிப்புகள் எதுவும் இன்னும் வரவில்லை. நாகார்ஜூன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் பிரபலமான பாடகர் Rahul Sipligunj ஐ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் வந்த ரங்கஸ்தலம், மஹரிசி, ஃபலக்னுமா தாஸ் படத்தில் ஹிட் பாடல்களை பாடியுள்ளாராம். இவர் வந்தால் மகிழ்ச்சி தான் என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

singer-at-bigboss-new-season-thinatamil
singer-at-bigboss-new-season-thinatamil