நடிகை சுஷ்மிதா சென்-ஐ பலருக்கும் தெரிந்திருக்கலாம். உலக அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி. சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர். இதுவரை திருமணமே செய்துகொள்ளாத நடிகை ரோமன் ஷால் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். நிஜமான கணவன் மனைவி போல தான் இருவரும் இருந்து வருகிறார்கள்.

அத்துடன் சுஷ்மிதா ரெனீ, அலீசா என்ற இரு பெண்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அண்மையில் அவர் தனக்கு நேர்ந்து சோக சம்பவம் பற்றி பேசி வருகிறார். கடந்த 2011 ல் அவர் சினிமாவில் பிசியாக இருந்த நேரம் படத்தின் சூட்டிங்கில் தலை சுற்றி மயங்கி கீழே விழுந்து விட்டாராம்.

அப்போது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது அட்ரீனல் சுரப்பியில் ஏற்பட்ட பிரச்சனை தான் மயக்கத்துக்கு காரணம் என மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம். அத்துடன் இனி என்னை காப்பாற்ற முடியாது, இறந்து போய்விடுவேன் என மருத்துவர்கள் உறவுக்காரர்களிடம் சொல்லிவிட்டார்களாம்.

இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்க ஒரு நாளைக்கு மூன்று முறை தொடர்ச்சியாக மாத்திரை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறி நிபந்தனை விதிக்க பின்னர் சிகிச்சை எடுத்து உயிர் பிழைத்துக்கொண்டாராம்.