அனைவருக்குமே அதிர்ஷ்டம், செல்வம் மிகுந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்குமே அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. வெகுசிலருக்கு மட்டுமே அவர்கள் விரும்பிய வாழக்கை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், செல்வமும் இருக்க வேண்டுமெனில் அதற்கு லக்ஷ்மியின் அருள் அவசியமானதாகும்.

லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமெனில் அதற்கு முறையான வழிபாடும், ஒழுக்கமும் தேவை. கடின உழைப்பிற்கு பிறகு அதன் பலனுக்கு காத்திருக்கும் போது லக்ஷ்மீ தேவி தனது வருகையை சில அறிகுறிகளின் மூலம் உணர்த்துவார். அதனை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் சாஸ்திரங்களின் படி செல்வத்தின் வருகையை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தேங்காய்
நீங்கள் எழும் நேரத்தில் தேங்காய் அல்லது வெள்ளை வாத்து போன்றவற்றை முதலில் பார்க்க நேர்ந்தால் அன்று உங்கள் வாழ்க்கையில் ஏதோ நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம். வெள்ளை பசு ஒன்று உங்கள் வழியில் குறுக்கிட்டால் கோவப்படாதீர்கள் அது லக்ஷ்மி தேவியின் வருகையாகும்.

பாம்பு
கனவுகள் எப்பொழுதும் உங்கள் எதிர்காலத்தை கூறுவதில் முக்கியபபங்கு வகிப்பதாகும். உங்கள் கனவில் தங்க நிற அல்லது வெள்ளை பாம்பை பார்க்க நேர்ந்தால் அது செல்வத்தின் தெளிவான அறிகுறியாகும்.

குரங்கு
நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் பயணத்தில் குரங்கு அல்லது பாம்பை பார்த்தால் நீங்கள் விரைவில் செல்வந்தராக வாய்ப்புள்ளது என்று அர்த்தம்

பசுமை
உங்கள் கனவில் பசுமையான இடத்தையும், நீர் நிலையையும் ஒன்றாக பார்க்க நேர்ந்தால் உங்கள் வாழ்வில் பசுமை விரைவில் வரப்போகிறது என்று அர்த்தம்.

பால் பொருட்கள்
காலையில் எழும்போதே வெண்மை நிறத்தில் இருக்கும் பால் பொருட்கள் எதையாவது பார்த்தால் நீங்கள் விரைவில் செல்வந்தராக வாய்ப்புள்ளது.

மெல்லிசை
காலையில் உங்கள் வீட்டருகே சங்கு அல்லது கோவில் பாடல்கள் அல்லது பஜனைகளை கேட்க நேர்ந்தால் உங்களை நோக்கி செல்வம் வருகிறது என்று அர்த்தம்.

கரும்பு
உங்களின் காலை நேர பயணத்தில் கரும்பை நீங்கள் பார்க்க நேர்ந்தால் உங்களை நோக்கி செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம்.

வௌவால்
சீன ஜோதிட சாஸ்திரங்களின் படி வௌவால் என்பது செல்வத்தின் அடையாளமாக இருக்கிறது. திடீரென உங்கள் வீட்டிற்குள் வௌவால் நுழைவது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் வீட்டிற்குள் வௌவால் கூடு கட்டுவது உங்களை நோக்கி செல்வம் வரபோவதற்கான அறிகுறி ஆகும்.

ராசியான நாள்
அனைவருக்குமே வாரத்தில் ஒரு கிழமை அல்லது மாதத்தில் ஒரு நாள் ராசியான நாளாக இருக்கும். அந்த நாளில் அவர்களுக்கு நல்லதே நடக்கும் என்று நம்புவார்கள். அந்த ராசியான நாளில் நீங்கள் யாருக்காவது கொடுத்து உதவினால் அதனை விட பல மடங்கு பணம் உங்களை தேடி விரைவில் வரும்.

பறவையின் எச்சம்

seeing-bird-at-morning-thinatamil
seeing-bird-at-morning-thinatamil

பறவையின் எச்சம் நம் மேல் விழுவது என்பதும் மிகவும் எரிச்சலான ஒன்றாகும். ஆனால் சாஸ்திரங்களின் படி இது மிகவும் புனிதமான ஒன்றாகும். இவ்வாறு பறவையின் எச்சம் மேலே விழுபவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுவார்கள்.

நாய்
உங்கள் வீட்டை தேடி நாய்க்குட்டி வந்தால் அது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும்.இது செல்வம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் அறிகுறியாகும்.