ஓவியா நடித்த ’90ml’ திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகாலை 5 மணி காட்சி இந்த படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் ‘பழம்’ ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகி பலரின் பாராட்டையும் ஒருசிலரின் கண்டனத்தையும் பெற்று வந்த நிலையில் சற்றுமுன் ‘பால்’ என்ற ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஓவியாவின் தோழி ஒருவர் தன்னுடைய முதலிரவு அனுபவத்தை விவரிக்க அதற்கு ஓவியாவும் அவரது மற்ற தோழிகளும் இடையிடையே கமெண்ட் அடிக்க, மொத்தத்தில் இந்த படம் ஒரு அடல்ட் காமெடி படம் என்பது உறுதியாகிறது

அழகிய அசுரா இயக்கத்தில் சிம்பு இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஓவியா, பொம்மு, மாசூம், ஸ்ரீகோபிகா, மோனிஷா, அன்சான்பால், தேஜ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.