இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். திருமண பேட்டோவை சாய்னா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சக வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சாய்னா நேவால். அதேபோல் சிறந்த வீரர் பாருபள்ளி காஷ்யப். இருவரும் காதலித்து வருவதாகவும், திருணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.

கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான், டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று சாய்னா தெரிவித்தார்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட போட்டோவை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.