பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.

கொழும்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பி வருகிறார்கள். மேலும் வவுனியாவிலும் பல எரிபொருள் நிலையங்களில் இரவு பகலென மக்கள் நிரம்பி வழிவதை காணக்கூடியதாக உள்ளது.