குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் அசுவினி 04.10.2018 முதல் 04.11.2019 வரை

எப்பொழுதும் நம்பிக்கையுணர்வுடன் செயல்படத் துடிக்கும் அசுவினி நட்சத்திர அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் பொதுவாக வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை சரியாகும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்தேறும். வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். எடுத்த காரியத்தில் தடை, முதலீடு செய்த அசல் கிடைக்காமல் நஷ்டம் என மோசமாக இருந்த காலகட்டம் மாறும். தொழிலில் இதுவரை விரயமான பணம் திரும்ப கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை வர வேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களின் காரியங்கள் அனைத்திலும் குரு பகவான் துணை நிற்பார். காரியத் தடைகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு பெரிய மாற்றம் இல்லை என்றாலும் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பின்னடைவு இல்லை. அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் தரும் பெயர்ச்சியாக இருக்கும். உங்கள் மேலிடத்தில் இருந்து உங்களுக்கு சில புதிய மற்றும் முக்கிய பொறுப்புகள் தருவார்கள். கலைத்துறையினர் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கதை எழுதுபவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்:

தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.

ஏனைய நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை இங்கே சென்று பார்வையிடுங்கள்