விஜய் தற்போது மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறார் என்பதை மறைமுகமாகவும், நேரடியாகவும் சில விசயங்கள் குறிப்பிட்டு காட்டுகிறது. அதையும் தாண்டி அவரை அரசியல் தளத்தில் எதிர்பார்க்கிறார்கள் சிலர்.

ஆனால் இந்த விசயத்தில் அவரின் சொந்த முடிவு என்பதில் சந்தேகமில்லை. அவர் பொது மேடைக்கு வந்தாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவரை பேச வைக்காமல் விட்டுவார்களா என்ன?

பல நிகழ்ச்சிகளில் அவர் மேடையில் பேசியது மட்டுமல்ல சின்ன சின்ன அசைவுகளும் பயங்கர ட்ரெண்டிங் ஆகியுள்ளது. இதே போல அவரின் வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடைபெற்றது.

கூட்டத்தில் இருந்த தனது ரசிகனை கூப்பிட்டு வேலாயுதம் படத்தில் ஒலி நாடாவை வெளியிட செய்தார். கடந்த 2011 ஆகஸ்ட் 28 ம் நாள் தான் இந்த நிகழ்வு நடைபெற்றது. தற்போது 7 வருடங்கள் ஆகிவிட்டது.