மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபேட் (2018) மாடலை தற்சமயம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஆப்பிள் நிறுவனம், குறிப்பாக பிளிப்கார்ட் வலைதளம் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஐபேட் (2018) மாடலை மிக எளிமையாக வாங்க முடியும். மேலும் இந்திய சந்தையில் அதிகளவு ஐபேட் மாடலை விற்க திட்டமிட்டள்ளது ஆப்பிள் நிறுவனம்.

பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் இந்த ஐபேட் (2018) மாடலுக்கு குறிப்பிட்ட விலைகுறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு நவீன மென்பொருள் அம்சங்களை கொண்டு  வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய ஐபோன் மாடலை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

டிஸ்பிளே:
ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ள இந்த ஐபேட் (2018) மாடல் பொறுத்தவரை 9.7-இன்ச் ஐபிஎஸ் ரெடினா டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2048×1536 பிக்சல் திர்மானம் மற்றும் ஒரு ஆப்பிள் பென்சில் ஆதரவு கொண்டுள்ளது.

ஃபியூஷன் சிப்செட்
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஐபேட் சாதனத்தில் 64-பிட் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வசதி மற்றும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புளூடூத் 4.2. மற்றும் வைஃபை 8011.11ஏசி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நிறங்கள்:
ஆப்பிள் ஐபேட் (2018) சாதனம் பொதுவாக வெள்ளி, தங்கம் மற்றும் ஸ்பேஸ் சாம்பல் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் குறிப்பிட்ட சலுகை கிடைக்கும் என்றுத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா
இந்த சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் டச் ஐடி, ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா போன்ற அம்சங்களும் இதனுடன் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் மற்றும் டிஜிட்டல் திசைகாட்டி, லைட் சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

விலை:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் (2018) மாடலில் 10மணி நேர பேட்டரி பேக்கப் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை 28,000-ஆக உள்ளது,இதனுடன் வெளிவரும் ஆப்பிள் பென்சில் விலை ரூ.7,600-ஆக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஐபேட்களின் விற்பனையில் ஏற்பட்ட கடும் சரிவை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் கடும் அதிர்ச்சி அடைந்தது. எனவே விற்பனை எண்ணிக்கையை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, இந்த ஆப்பிள் சாதனத்தை தற்சமயம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.