பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நிகழ்ச்சியை தற்போது மலையாளத்திலும் நடத்தவுள்ளனர்.

அதை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறது. மற்ற இரண்டு பிரபல நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

மோகன்லால் தற்போது லால்சலாம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.