பேஸ்புக் நிறுவனம் காலத்துக்கு காலம் தனது பயனர்களை உற்சாகத்துடன் வைத்திருக்க பல உத்திகளையும் புதுமைகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.

ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பொய்யான விதத்திலேயே பயனர்கள் மத்தியில் பரவலடைவது மிகவும் கவலைக்குரியது.

அந்த மாதிரியான ஒரு விடயமே BFF பாதுகாப்பு சோதனை என்னும் வதந்தி.

அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கு பாதுகாப்பானதா? அறிந்து கொள்வதற்கு பேஸ்புக் நிறுவுனர் மார்க் புதிய முறை ஒன்றை உருவாக்கியுள்ளார். கமெண்ட் இல் BFF என டைப் செய்யவும், அது பச்சை நிறத்துக்கு மாறுமாக இருந்தால் உங்கள் கணக்கு பாதுகாப்பனது என்னும் ஒரு விடயத்தை சமுக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள்.

இது முற்றிலும் பொய்யான ஒரு விடயம். இதன் உண்மை என்னவென்று தெரியுமா?

BFF என்பதன் விரிவு Best Friend Forever என்பதாகும், இது பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் மற்றுமொரு வார்த்தை வண்ணம் (Text Delight). இதனை உங்கள் நண்பர்களின் கமெண்டில் BFF என டைப் செய்தால் வண்ண மயத்தில் பறந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும், உங்கள் நண்பர் இதை கிளிக் செய்தாலும் இதே போல வண்ணம் பறந்து அவரை மகிழ்விக்கும்.

ஆனால் இப்போது உங்கள் முன் ஒரு கேள்வி இருக்கும் , ஏன் சிலருக்கு மட்டும் அதன் நிறம் மாறவில்லை , வண்ணம் எழும்பவில்லை ? இதன் உண்மை காரணம் இது தான்.

இந்த Text Delight Animation feature பழைய Fb Version ,அல்லது பழைய Version browsers களில் வேலை செய்யாது. உங்கள் Fb Update பண்ணப்பட்டு இருப்பின் நீங்கள் BFF என்று டைப் செய்யும் பொது அது பச்சை நிறத்துக்கு மாறும்.உங்கள் FB பழைய version எனில் நிறத்தில் மாற்றம் ஏற்படாது.

BFF போன்ற இன்னும் பல வகை Text Delight அனிமேஷன்கள் உள்ளது. Congratulations, best wishes, வாழ்த்துக்கள், you got this, you’re the best, Congrats என பல வகை வார்த்தை வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் உண்மை தன்மையை அறியாது இது ஒரு பாதுகாப்பு பொறிமுறை என்னும் பொய்யான செய்தி பல கீழ் நிலை ஊடகங்களால் பரப்பபட்டு வருகின்றது. தயவு செய்து இவ்வாறன பொய்யான தகவலை பரப்ப வேண்டாம்.

பிடிடிச்சிருந்தால் நண்பர்களுடன் Share பண்ணுங்கள்