குஜராத் உணவு வகைகளில் இந்த டோக்ளா மிகவும் பிரபலம். இன்று ரவையை வைத்து எளிய முறையில் டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்
தயிர் – 1/4 கப்
உப்பு – சுவைக்கேற்ப
மிளகுப் பொடி – 1/4 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய்ப் பொடி – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
ஈனோ(ரெகுலர்) – 1 சிறிய பாக்கெட்

தாளிக்க :

கடுகு, சீரகம், ப.மிளகாய் – 2.

செய்முறை :

ரவையில் தயிர் கலந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, உப்பும் சேர்த்து, ரவை கலவையில் கலக்கவும்.

அடுப்பில் குக்கர் வைத்து, தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.

ஒரு தட்டில் எண்ணெய் தடவி தயாராக எடுத்து வைக்கவும்.

ரவைக் கலவையில் ஈனோ சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவை தயிர் பதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை, எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி அதன் மேல் [பாட்டி மசாலா] மிளகுத் தூளை பரவலாகத் தூவவும்.

இந்த கலவையை குக்கருக்குள் வைத்து கலவையில் தண்ணீர் பட்டு விடாமல், அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதன் மேல் இந்தக் கலவை இருக்கும் தட்டை வைக்க வேண்டும்.

குக்கரில் வெயிட் போட வேண்டாம். ஒரு தம்ளரை குக்கரின் மேல் வெயிட் போடும் இடத்தில், மூடி வைக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை அணைக்கவும்.

பாத்திரத்தை வெளியில் எடுத்து, ஓரங்களில் சிறிய ஸ்பூன் அல்லது கத்தியால் நெகிழ்த்தி விட்டு, இன்னொரு தட்டில் எடுத்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், ப.மிளகாய் சேர்த்து தாளித்து ரவை டோக்ளா மேல் தூவி பரிமாறவும்.

சூப்பரான ரவை டோக்ளா ரெடி.