எதிர்காலத்தில் அமீர்கான் என்றாலே, தரம் என்று ‘டிக்‌ஷனரி’யில் இடம் பெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒண்ணும் இல்லை. அந்தளவுக்கு தன்னுடைய திரை வாழ்க்கையை காதலிக்கிறவர் அமீர். தற்சமயம் விவோ பிராண்ட் விளம்பர தூதராக செயல்பட்ட ரன்வீர்சிங்-க்கு பதிலாக அமீர்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விவோ நிறுவனத்தின் விளம்பர தூதராக ரன்வீர்சிங் இருந்தார், தற்சமயம் ரன்வீர்சிங்-க்கு பதிலாக அமீர்கான் மாற்றப்பட்டுள்ளார். மேலும் வரும் 23-ம் தேதி விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்பின்பு விவோ வி9 ஸ்மார்ட்போனின் டீசர் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் 23 மில்லியன் பேரும், பேஸ்புக்கில் 15 மில்லியன் பேரும் அமீர்கானைப் பாலோ செய்கின்றனர்.

இந்நிலையில் விவோ பிராண்ட் விளம்பர தூதராக அமீர்கான் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல். விவோ வி9 ஸ்மார்ட்போன் மார்ச் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும், அதே நாளில் பகல் 3மணி முதல் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கும் என அமேசான் இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080×2160பிக்சல்தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது விவோ வி9 ஸ்மார்ட்போன். குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.