வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளுக்கான க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் வசதியை புதிய அப்டேட் வழங்குகிறது.

வாட்ஸ்அப் செயலியின் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் டிஸ்க்ரிபஷன் அம்சம் வழங்கப்பட்டது. அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டு வரும் புதிய அப்டேட் கடந்த சில வாரங்களாக ஆண்ட்ராய்டு பீட்டாவில் வழங்கப்பட்டது.

புதிய க்ரூப் டிஸ்கிரிப்ஷன் வசதி பெரிய அப்டேட் இல்லை என்றாலும், பயனுள்ள அம்சமாக உள்ளது. அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டிருக்கும் இந்த அம்சத்தை இயக்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்க்கவும். புதிய அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ்அப் அப்டேட் செய்ய வேண்டும்.

– முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு ஸ்மார்ட்போன் திறந்து, டிஸ்கிரிப்ஷன் உருவாக்க வேண்டிய க்ரூப் -ஐ தேர்வு செய்ய வேண்டும்.

– இனி க்ரூப் இன்ஃபோ ஆப்ஷனில் டிஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

– க்ரூப் டிஸ்க்ரிப்ஷனை புதிதாக சேர்க்கவோ அல்லது மாற்றவோ செய்யலாம். மாற்றப்பட்ட க்ரூப் டிக்ரிபஷனை குறிப்பிட்ட க்ரூப்-ல் இருக்கும் அனைவராலும் பார்க்க முடியும்.

வாட்ஸ்அப் க்ரூப் பயன்படுத்துவோர் தேடல் வசதியும், வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்களின்பையும் எளிமையாக மாற்றவும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முந்தைய ஆண்ட்ராய்டு beta 2.18.4 வெர்ஷனில் வழங்கப்பட்டது. வாட்ஸ்அப் சேவை தற்சமயம் 130 கோடி பேர் உலகம் முழுவதும் பயன்படுத்துகின்றனர்.