தேங்காய்ப்பால் ஆப்பம்
தேங்காய்ப்பால் ஆப்பம்

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி – 2 கப்,
பச்சரிசி – 1 கப்,
உளுத்தம்பருப்பு – 5 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 6 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு, ஜவ்வரிசி – தலா 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய வெல்லம் – 2 கப்,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
திக்கான தேங்காய்ப்பால் – 2 கப்.

எப்படிச் செய்வது?

புழுங்கலரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் வெல்லத்தை சேர்த்து கலக்கவும். மாவும், வெல்லமும் நன்றாகக் கலந்ததும், தவாவில் ஒரு கரண்டி மாவினை ஊற்றி, ஓரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும். (இதனை திருப்பிப் போடக்கூடாது) வெந்ததும் ஒரு கரண்டி தேங்காய்ப்பாலை அந்த ஆப்பத்தின் மேல் ஊற்றி பரிமாறவும்.