நாடு முழுவதும் புதிதாக 3,277 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,939-ஆக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 128 போ் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,277 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 128 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,939 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2,109 ஆக அதிகரித்துள்ளது. 19,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 20,228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 779 பேர் பலியாகி உள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் இதுவரை 7,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 472பேர் உயிரிழந்துள்ளனர், தேசிய தலைநகர் தில்லியில் 6,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 73 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளன, 45 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தானில் 3,708 பேர், மத்தியப் பிரதேசத்தில் 3,614 பேர், உத்தரப் பிரதேசத்தில் 3,373 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா 14-வது இடத்தில் இருந்து வருகிறது.