Friday, April 19, 2024

கவுதம் மேனனுடன் இணைந்த சிபிராஜ்

- Advertisement -

நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் தற்போது நடித்துவரும் புதிய படத்தில் இயக்குனர் கவுதம் மேனனுடன் இணைந்திருக்கிறார்.

நடிகர் சத்யராஜ் நடித்த ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படம், கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டானது. தற்போது அவரது மகன் சிபிராஜ் ‘வால்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வரும், இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இப்படத்தில் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இதே படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

- Advertisement -

Contact Now!

sibiraj5._thinatamil
sibiraj5._thinatamil

இதுதொடர்பாக, சிபிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- ‘கவுதம் மேனன் அவர்களுடனும், சமுத்திரக்கனி அவர்களுடனும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link