முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பனாமாவைப் பந்தாடி, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து. ‘ஜி’ பிரிவில் நடந்த லீக் போட்டியில், கோல் மழை பொழிந்த இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஹேரி கேன் 3 கோல்கள் அடித்து அசத்தினார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக டெலி அல்லி இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக லோஃப்டஸ் சீக் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இங்கிலாந்து அணி பனாமா பாக்சுக்குள்ளேயே குடியிருந்தது. ஆறாவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் மூலமாக அந்த அணி முன்னிலையும் பெற்றது. கீரன் ட்ரிப்பியர் கிராஸ் எடுக்க, பெனால்டி ஏரியாவில் மார்க் செய்யப்படாமல் நின்றிருந்த ஜான் ஸ்டோன்ஸ் ஹெட்டர் மூலம் மிக எளிதாக அதை கோலாக்கினார். அடுத்து 22-வது நிமிடத்தில், எஸ்கோபார் லிங்கார்டைத் தள்ளிவிட பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கேப்டன் கேன் கோலாக்கினார்.

AP18175444247155 19471 -

36-வது நிமிடத்தில் ஓர் அற்புதமான அட்டாகிங் மூவ் ஆடியது இங்கிலாந்து. யங், ஸ்டெர்லிங், லிங்கார்ட் என அழகாக பாஸ்களாக ஆட, பாக்சுக்கு அருகிலிருந்து கர்லர் ஒன்றை அடித்து அசரடித்தார். 40-வது நிமிடத்தில் ஜான் ஸ்டோன்ஸ்… இந்த முறையும் ஹெட்டர். இங்கிலாந்து அட்டாக்கிங்

கேமை நிறுத்தவே இல்லை. வெறித்தனமாக விளையாடியது அந்த இளம் படை. முதல் பாதி முடியும்போது இன்னுமொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதையும் கோலாக்கினார் கேன். முதல் பாதியில் மட்டும் 5 கோல்கள். 5-0.AP18175471131478 19095 -

இரண்டாவது பாதியிலும் பாரபட்சமே இல்லாமல் அதிரடி காட்டியது இங்கிலாந்து. 62-வது நிமிடத்தில் லோஃப்டஸ் சீக் அடித்த ஷாட், கேனின் காலில் பட்டு கோலில் விழுந்தது. இதன்மூலம் இந்த உலக்க கோப்பையில் ஹாட்ரிக் அடித்த இரண்டாவது வீரரானார் கேன். அதுமட்டுமில்லாமல், அதிக கோல் அடித்தவர்களில் வரிசையில் 5 கோல்களுடன் முதலிடத்துக்கும் முன்னேறினார். பனாமா அணிக்கு ஆறுதலாக ஃபெலிபே பலோய் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜி பிரிவிலிருந்து இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. பனாமா, துனிஷியா அணிகள் வெளியேறின.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here