ஹாலிவுட்டில் நட்சத்திரங்கள் பொது இடங்களில் முத்தமிடுவது சகஜம். கோலிவுட்டில் தற்போது கைகுலுக்கும் நடைமுறை மாறி கட்டிபிடி கலாச்சாரம் ஆரம்பமாகியிருக்கிறது. இளம் ஹீரோ, ஹீரோயின்கள் நேரில் சந்திக்கும் போது கட்டி அணைத்து வரவேற்கின்றனர். சென்னையில் நேற்று ‘ஆந்திரா மெஸ்’ பட விழா நடந்தது. இதில் ராஜ்பரத் ஹீரோ, தேஜஸ்வினி ஹீரோயின். இப்படத்தில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ராஜ்பரத் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது வந்த தேஜஸ்வினி திடீரென்று ராஜ்பரத்தை கட்டி அணைத்தார். ராஜ்பரத்தும் அவரை கட்டி அணைத்தார். இதை புகைப்படக் கலைஞர்கள் படம் எடுத்து தள்ளினர். படத்தில் ஜோடி சேர்ந்தவர்கள் காதலர்கள் ஆகிவிட்டார்களா என்றபோது நட்பை பரிமாறிக்கொள்ளும் விதமாகவே அவர்கள் கட்டி அணைத்ததாக பட குழுவினர் கூறினர். பிறகு படம் பற்றி இயக்குனர் ஜெய் கூறும்போது,’பொதுவாக பெண்கள் வீக்கர் செக்ஷன் (பலவீனமானவர்கள்) என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் ஆண்கள்தான் வீக்கர் செக்ஷன்.
இதைத்தான் இப்படம் பேசுகிறது. ஆந்திரா மெஸ் என்று டைட்டில் வைத்ததால்தான் 3 ஆண்டுகள் வெளிவராமலிருந்து தற்போது வெளிவரவுள்ள நிலையில் இப்படத்ைத ஞாபகம் வைத்திருக்கிறார்கள். இது வழக்கமான திரைக்கதையாக இல்லாமல் புதிய கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ராஜ்பரத், தேஜஸ்வினி, ஏ.பி.தர், பூஜா தேவரியா நடிக்கின்றனர். பிரசாந்த் பிள்ளை இசை. நிர்மல் கே.பாலா தயாரிப்பு. முகேஷ்.ஜி ஒளிப்பதிவு’என்றார்.